தமிழ்நாடு வேளாண்., பல்கலைக்கழகத்தின் 48-வது நிறுவன நாள் விழா

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 48-வது நிறுவன நாள் விழா மற்றும் தொலைநிலைக் கல்வி பட்டத்தகுதி பெறும் விழா இன்று நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 48-வது நிறுவன நாள் விழா மற்றும் தொலைநிலைக் கல்வி பட்டத்தகுதி பெறும் விழா இன்று நடைபெற்றது. 



நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பெ. சாந்தி, பண்ணை பட்டயப் படிப்பு குறித்து விளக்கினார். மூன்று வருடப் படிப்பானது 6 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 561 விவசாயிகள் மற்றும் பயனாளிகள் இப்பட்டத்தைப் பெற்றுள்ளனர். சிறப்பு முகவுரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. ராமசாமி 1863-ல் சைதாப்பேட்டையில் விவசாயப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்து நினைவு கூர்ந்தார். 



விழாவில் சிறப்புரையாற்றிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக இணை இயக்குநர் ஜெனரல் அழகுசுந்தரம், 220-க்கும் மேற்பட்ட வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு, பருவகால மாற்றத்தால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பிற்கு தீர்வு காண வேண்டும் என விஞ்ஞானிகளைக் கேட்டுக்கொண்டார்.



 

இந்நிகழ்வில், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற சேவையாற்றிய 8 அலுவலகப் பணியாளர்கள், 20 மற்றும் 10 வருடங்களுக்கு மேலாக திறம்பட பணியாற்றிய ஓட்டுநர்கள் கௌரவிக்கப்பட்டனர். 229 வேளாண் பண்ணை இளநிலை தொழில்நுட்பப் பட்டப் படிப்பு பயின்றவர்களுக்குப் பட்டங்களும் வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர், சிறந்த பெண் விஞ்ஞானி, சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...