திருப்பூர் : உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்து. அதன்மூலம் இருசக்கர வாகனத்தை இயக்கி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
திருப்பூர் : உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்து. அதன்மூலம் இருசக்கர வாகனத்தை இயக்கி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்தி அதிகளவில் பயன்பாட்டில் இல்லாத நிலையில், ஆட்டோ மொபைல் மற்றும் அவை சார்ந்த நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற இன்றைய சவால்களையும் கருத்தில் கொண்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மாற்று எரிசக்தி இருக்க வேண்டும் என்பதும் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், ஆசியாவில் அதிக பெண்கள் படிக்கும் பள்ளியான திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரி. 10-ம் வகுப்பு மாணவியான இவர், கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டார். அப்போது, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இருசக்கர வாகனத்தை இயக்கி சாதனை படைத்தார். இதன் மூலம், மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவி யோகேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.