காந்திபார்க் அருகே 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: காந்திபார்க் அடுத்த பொன்னையராஜபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: காந்திபார்க் அடுத்த பொன்னையராஜபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



சூலூர் பகுதியில் குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாமஸ் வீதி, ராஜ வீதி, தர்மராஜா கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் சுமார் 1,100 கிலோ எடையிலான பான்பராக் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக காந்திபார்க் அடுத்த பொன்னையராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 



தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் அந்த வீட்டில் மூன்று அறைகளில் மூட்டை மூட்டையாக பான் மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.



தொடர்ந்து அங்கிருந்த சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 மூட்டைகளிலான தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர், விசாரணையில் ஷர்வான்குமார் என்ற வடமாநில வாலிபர் தனக்கு சொந்தமானது என கூறியுள்ளார். எனினும் அவர் மீது சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டின் உரிமையாளர் யார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...