நீலகிரி: கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் ஆதிவாசி காட்டுநாயக்கன் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 11.04.2018 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் 300.8 சதுரஅடி பரப்பளவில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்தச் சான்றின் அடிப்படையில் மேற்படி இடத்தைக் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்த பின், நேற்று வீடு கட்டுவதற்கான அஸ்திவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, தனியார் எஸ்டேட் ஊழியர்கள், தங்களது முதலாளியிடம் கேட்காமல் எந்த வேலையும் செய்ய கூடாது எனக் கூறி, 2 காவலர்களுடன் வந்து வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மீறி வீடு கட்டினால் ஜே.சி.பி. இயந்திரத்தை வைத்து வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுவோம் என்று கூறியுள்ளனர்.
மேலும், அஸ்திவாரத்திற்காக தோண்டிய குழிகளை மூடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். எனவே, அரசு வழங்கிய இடத்தில் வீடுகட்ட இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி இனமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்று அளித்தனர்.