கோவை: ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் கூற்று அனைத்து விதங்களிலும் பொருந்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இயற்கையை பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மை. வளங்களை சுரண்டும் போது அது கொடுக்கும் எதிர்வினை மனிதனை இயற்கை முறையில் வாழ விடுவதில்லை.

தடாகம் பகுதியில் வளங்கள் சுரண்டப்படுவது கண்கூடத் தெரிந்தாலும் அதனை கேட்பாரில்லை. சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வழிப்பாதை முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டது இதற்கு உதாரணம்.
இந்த ஏரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நீர் வந்தாலும், அதிகமாக மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து கிடைக்கும் நீர் தடாகம் பகுதியை கடந்து வருவது தான். ஆனால், மண் எடுப்பதற்காக முப்பது அடி வரை நிலத்தை தோண்டி நீர் வழிப்பாதையை முற்றிலுமாக மறித்து செங்கல் சூலை உரிமையாளர்கள் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து கவுசிகா நதி மீட்புக்குழுவை சேர்ந்த செல்வராஜ் கூருகையில், " ஆயிரத்திற்கு மேற்பட்ட செங்கல் சூலைகள் தடாகம் பகுதியை சுற்றிலும் அமைந்துள்ளன. அந்த பகுதியில் மூன்று அடிக்கு மணல் எடுக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்ட விரோதமாக முப்பது அடி வரை மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலை மோசமானதாக அமைந்துள்ளது. சூழல் தொடர்பான செய்தியைச் சேகரிக்க சென்றபோது தான் இந்த அத்துமீறல் தெரியவந்தது. அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வளங்களைச் சுரண்டினால், நீராதாரம் பாதிக்கப்படும். இதனை அனைவரும் உணர வேண்டும்." என்றார்.