கோவை: டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கக் கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வீரகேளம் நாகராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள கடை எண்:1645 துணை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக் கடை உரிமையாளர் மற்றும் அடியாட்களை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:- மதுபானக்கூட உரிமம் பெற்ற பழம்பதி என்பவர் இந்த மதுபானக் கூடத்தை சுப்ரமணி என்பவருக்கு உள் வாடைக்கு விட்டுள்ளார். கடையை நடத்தி வரும் சுப்ரமணி சட்டத்திற்கு புறம்பாக இரவு, பகல் பாராமல் மது வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல், இதனைத் தட்டிக் கேட்கும் டாஸ்மாக் ஊழியர்களை அடியாட்கள் மூலம் தாக்குகின்றனர்.
கடந்த மாதம் 30-ம் தேதியன்று துணை விற்பனையாளர் மீது பழம்பதியின் சகோதரர் தாக்குதல் நடத்தியதில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கடையின் துணை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும். மதுபானக்கூட உரிமதாரரின் காப்புத் தொகையை பறிமுதல் செய்வதுடன், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.