கோவை: இந்த வருட ரோட்டரி கிளப் நலத் திட்டங்களுக்காக ரோட்டரி பவுண்டேஷனுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கோவை: இந்த வருட ரோட்டரி கிளப் நலத் திட்டங்களுக்காக ரோட்டரி பவுண்டேஷனுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் இன்று காலை ரோட்டரி கிளப் 3201 மாவட்ட ஆளுநர் பதவியேற்பு விழா மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் வெஸ்ட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தொடர்ந்து, ரோட்டரி கிளப் 3201 மாவட்ட ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட ஏ.வி. பதி பேசுகையில், "இந்த மாவட்ட ஆளுநர் பதவி எனக்கு காலம் தந்த பரிசு. இந்த பரிசை மதிப்பு மிக்கதாக ஆக்க முழு முயற்சியுடன் பாடுபடுவேன். இயற்கை மற்றும் மக்களின் வாழ்க்கை சீரமைத்தல் நமது கடமை ஆகும். அதற்கான பணிகளை இன்றே தொடங்கிவிட்டேன். கொச்சின் யுனைட்டெட் அமைப்பு நமது ரோட்டரி பவுன்டேஷனுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டாலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இதற்காக அவர்களுக்கு எனது சார்பாகவும் உங்களது சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் பல அமைப்புகள், தனி நபர்கள், டாலர்களாக இன்று நிதி வழங்கியுள்ளார்கள். இன்று மட்டும் மொத்தமாக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 10 லட்சம் நிதி பெற இலக்கு வைத்துள்ளோம்.
நமது ரோட்டரி கிளப் சார்பில் இந்த ஆண்டு 'இயற்கையின் வழித்தடங்கள்' என்ற மையக்கருத்தை வைத்து நமது பயணத்தை தொடங்குவோம். திட்டங்களும், செயல்பாடுகளும் இதையொட்டியே அமைந்திருக்கும். நமது இந்த ஆண்டு லட்சியமாக இயற்கையை காக்கும் வகையில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம். இதன் முன் முயற்சியாக இன்று மட்டும் கோவையில் சுமார் 1300 மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளோம்.
பொது மக்களுக்கு பத்து லட்சம் லிட்டர் அளவு சுகாதார குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வோம். பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு கிடைக்க வழி செய்வோம். பத்து லட்சம் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைப்போம். ரோட்டரி தலைமைக்கு சமுதாய பணியாற்ற பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை நமது மாவட்டத்தின் மூலம் வழங்குவோம்." என்று பேசினார்.