நீலகிரி: தமிழக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று நீலகிரியில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கோத்தகிரியில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேறக் கழகத்தின் துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான டி.டி.வி.தினகரன் கோத்தகிரிக்கு வந்தார்.

முன்னதாக, டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்-ன் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசை எதிர்த்து பேசுபவர்கள் மற்றும் விமர்சனம் செய்பவர்களை கைது செய்து அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்ட 19 எம்.எல்.ஏ.,க்கள் உல்லாசமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். அவர் கீழ்பாக்கத்தில் சேர்க்கப்பட வேண்டியவர் என்பதே எனது பதில். நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும். அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் போது நிச்சயம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்." என்று அவர் கூறினார்.