கோவை: அன்னூர் அருகே அதிவேகமாக வந்த லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை சேர்ந்த எட்டு வாலிபர்கள் பேர் நேற்று இரவு இருசக்கர வாகனங்களில் ஊட்டி சுற்றுலா செல்வதற்காக புறப்பட்டு சென்றனர். இரவு 12 மணியளவில் அன்னூரை அடுத்துள்ள குருக்கிலியாம்பாளையம் அருகே சென்ற போது மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இஷ்மாயில், நிஷாந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.