நிரம்பியது சோலையாறு அணை : நிரம்பி வருகின்றன கோவை மாவட்ட அணைகள்

கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. சோலையார் அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது. 



அணையில் இருந்து 1014.81 கன அடி விடுவிக்கப்பட்டு பைபாஸ் வழியாகவும், சேடல் வழியாக 29.28 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது.

ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விரைவில் முழுவதுமாக நிரம்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுவாணி அணையைப் பொறுத்தவரையில் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அணைகள் நிரம்பியுள்ள காரணத்தால் மேற்குமண்டலத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேவைக்கு அதிகமான நீர் இருப்பதால், இந்த ஆண்டு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...