ஸ்டெர்லிங் தொழிற்சாலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்டெர்லிங் தொழிற்சாலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்டெர்லிங் தொழிற்சாலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

உதகை அருகே உள்ள சாண்டி நல்லா பகுதியில் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் கடந்த 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது இதில், 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கேப்சூல்கள் தயாரிக்கத் தேவையான ஜெலட்டின், டை கால்சியம் பாஸ்பேட் உரம் மற்றும் உண்ணக்கூடிய ஜெல்லி ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. 



நீண்ட காலமாக இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர், பைக்காரா அணையில் கலப்பதால், அதை குடிநீராக பயன்படுத்தும் பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 



அதற்கேற்றாற் போல, பைக்காரா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பது உரிய சான்றாக உள்ளது. தொழிற்சாலை நிர்வாகம் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே வெளியேற்றுகிறோம் என்று கூறி வந்தாலும், இந்த தொழிற்சாலை மீதான புகார் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. புகார் வரும் போதெல்லாம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீரை ஆய்வுக்கு உட்படுத்தி சோதனை செய்வார்கள்.



 

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்த தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பி கழிவு நீரை வெளியேற்றக் கூடாது. மீறினால் தொழிற்சாலை இயங்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியது. 

இந்நிலையில், நேற்று இந்த தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யாவிடம் மனு ஒன்றை அளித்தனர் 

இந்நிலையில், இன்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நளினி, தொழிற்சாலைகளின் ஆய்வாளர் தங்கராஜ், உதகை தாசில்தார் தினேஷ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் தொழிற்சாலையில் என்னென்ன அபாயகரமான பொருட்கள் உள்ளன என்றும், தேக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...