கோவை: உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியாவில் அ.ம.மு.க சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அ.ம.மு.க., நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இந்த அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால், மத்திய அரசின் அழுத்தம் காரணமாக சென்னை - சேலம் இடையே எட்டு வழி சாலை அமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு பெற்றுத் தரவும், அங்கு மலைகளில் உள்ள கனிமங்களை எடுக்கவுமே முதலமைச்சர் ஆர்வம் காட்டி வருகிறார்.
கோவையில் குடிநீர் விநியோகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பது தவறானது. தனியார் நிறுவனங்களிடம் சன்மானப் பெட்டியை பெற்றுக் கொண்டு, தமிழகத்தையே இந்த அரசு எழுதிக் கொடுத்துவிடும். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலையும் சட்டமன்ற தேர்தலையும் அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு தி.மு.க.,வை காரணம் காட்டுவது தவறானது. உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில் அ.ம.மு.க., வெற்றி பெறும், இவ்வாறு அவர் கூறினார்.