திருப்பூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருப்பூர்: போயம்பாளையத்தில் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்: போயம்பாளையத்தில் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால், தடையை மீறி ஒருசில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அவினாசி ஸ்ரீனிவாசா நகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,20,000 மதிப்புள்ள புகையிலை பொருட்களை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது, அதை பதுக்கி வைத்திருந்தவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கணபதி நகரில் உள்ள ஒரு குடோனிலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. 



இதையடுத்து, நேற்று இரவு திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் மாநகர அலுவலர்கள் முருகேசன், தங்கவேல் ஆகியோர் போயம்பாளையம் பகுதியில் உள்ள அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதுதொடர்பாக, சுரேஷ் (வயது 22) என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த குடோனில் புகையிலை பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்து, பின்னர் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சில்லறை முறையில் விற்பனை செய்வது தெரிய வந்தது. 



பின்னர், அங்கிருந்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த குடோனுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூரில் பல லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...