திருப்பூர்: திருப்பூரில் நீதிமன்றத்திற்குள் புகுந்து குற்றவாளியை கைது செய்த சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி சிட்டிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் என்பவர் திருப்பூர் நீதிமன்றத்திற்கு சரணடைய வந்தார். ஆனால், இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் முனிஸ்வரன், சட்ட விதிகளை மீறி நீதிமன்றத்திற்குள் புகுந்து சந்தோஷை கைது செய்தார்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நீதிமன்ற பணிகளும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர், ஆய்வாளர் முனிஸ்வரன் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை விசாரித்த தலைமை நீதிபதி, சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனிஸ்வரன் செயலுக்கு அரசு வழக்கறிஞரை அழைத்து கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்ற கண்டனத்துக்குள்ளான ஆய்வாளர் முனிஸ்வரன் தெற்கு மண்டல காவல்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், உடனடியாக தெற்கு மண்டல காவல் துறையில் பணிக்கு சேரும்படி காவல் துறை தலைமையகத்தில் இருந்து ஆய்வாளர் முனிஸ்வரனுக்கு உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது.