கோவையில் கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு

கோவை: லிங்கப்ப செட்டி வீதியிலுள்ள பாலவிநாயகர் கோவில் பூட்டை உடைத்து 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.35 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: லிங்கப்ப செட்டி வீதியிலுள்ள பாலவிநாயகர் கோவில் பூட்டை உடைத்து 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.35 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை லிங்கப்ப செட்டி வீதியில் பாலவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த சாமிக்கு அணிவிக்கக்கூடிய 8 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். 



இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற துணை ஆணையர் பெருமாள் மற்றும் தடய அறிவியல் துறையினர் கைரேகைகளை எடுத்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...