கோவை: கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்துக் கொள்வதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கார்களை எடுத்துச் சென்று அடமானம் வைத்த கும்பலைச் சேர்ந்த நபரை டிராவல்ஸ் உரிமையாளர்கள் பிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குனியமுத்தூர் பகுதியை சார்ந்த பாலசந்தர் என்பவர் தனது டிராவல்ஸ் நண்பர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தன்னிடம் சீலியூரை சேர்ந்த அஜீத் என்பவர் 6 கார்களை வாடகைக்கு எடுத்து ஏமாற்றியதாகவும், மேலும், தனது நண்பர்கள் சிலரிடமும் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்று பல டிராவல்ஸ் நிறுவனங்களில் கார்களை எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளதாக வாடகை கார் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், அஜித் சொல்லியதாகக் கூறி கார்களை எடுத்துச் சென்ற சந்துரு என்பவரை பாதிக்கப்பட்டவர்கள் தேடிப் பிடித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்து மோசடி செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.