கோவை: கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், ஆர்.ஜி. நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த அ.தி.மு.க., மண்டல் தலைவர் ஆதிநாராயணுடன் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக, கடந்த 2016 மே மாதம் ஆதிநாராயணன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை அடுத்து வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது வெரைட்டிஹால் சாலையில் அடிதடி வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, அவர்களிடம் வழக்கு சம்பந்தமான குற்றபத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.