சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே வரும் 30-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே வரும் 30-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் 06037 : சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் ரயில்நிலையம் இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்பட இருக்கிறது. வரும் 30-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 08.00 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், மறுநாள் காலை 08.45 மணிக்கு எர்ணாகுளம் ரயில்நிலையத்திற்கு சென்றடையும். இந்த ரயிலில் 3 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 12 படுக்கையறையுடன் கூடிய பெட்டிகளும், பொதுப் பிரிவில் 3 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு 29-ம் தேதி காலை 8 முதல் தொடங்குகிறது.
ரயில் நிறுத்துமிடங்கள் : அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டபாலம், திரிசூர், அலுவா மற்றும் எர்ணாகுளம் டவுன்.