கோவை : குனியமுத்தூர் - உக்கம் இடையே பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தரமற்ற தார் சாலை, மண்பாதையாக மாறியிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

குனியமுத்தூரில் இருந்து உக்கடம் வழியாக செல்லும் பாதையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளின் வசதிக்காக குனியமுத்தூரில் இருந்து உக்கடம் செல்ல மாற்றுப்பாதையாக பல கோடி செலவில் புட்டுவிக்கி சாலை போடப்பட்டது. ஆனால், தரமற்ற நிலையில், இந்த சாலை அமைக்கப்பட்டதால், இது தார் சாலையா..? அல்லது மண்பாதையா..? என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்கு தார் காணாமல் போகியுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு வெறும் 2 மாதங்களே ஆன நிலையில், 20 ஆண்டுகளைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.
வெறும் தார் சாலை அமைப்பதிலேயே இதுபோன்ற முறைகேடு நிகழ்ந்துள்ளதால், கோடிக் கணக்கில் செலவிடப்பட்டு அமைக்கப்படும் குனியமுத்தூர் - உக்கடம் புதிய மேம்பாலத்தின் நிலை என்ன..? என்பதில் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அலட்சியமாக இலாப நோக்கில் தரமில்லாத சாலையைப் போட்ட ஒப்பந்ததாரர் மீதும், இதனை ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.