நீலகிரி: உதகையில் விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்களை வாகனங்களில் அதிகமாக ஏற்றிச் செல்வதால், விபத்துகள் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் செங்குத்தான சாலைகள் மற்றும் அதிக வளைவுகளை கொண்ட மாவட்டமாகும். இந்த சாலைகளில் அவ்வப்போது சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் விபத்தில் சிக்கி மனித உயிர்கள் பலியாகுவதும், காயமடைவதும் தொடர் கதையாகவே உள்ளது.

மேலும், மாவட்டத்தில் விவசாயம் தொழில் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் தேயிலைகளைப் பறிக்க தோட்டத் தொழிலாளர்களை சரக்கு வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, பெற்றோர்கள் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், வாடகை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒருசில வாகன ஓட்டுநர்கள் சட்டவிதிகளுக்கு புறம்பான எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர்.

மேலும், இருசக்கர வாகனங்கள் வைத்துள்ள பெற்றோர்கள் மூன்றுக்கும் மேற்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இதனால், சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்துக்குள்ளாகி விலைமதிக்க முடியாத மனித உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்துக் கொள்ளுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.