முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கு : நால்வருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

திருப்பூர்: திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 



கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த தொழிலதிபரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினருமான சிவமூர்த்தி கடந்த 25-ம் தேதி மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சிவமூர்த்தியின் காரில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் ஆம்பூர் அருகே விமல், கௌதம், மணிபாரதி மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த வழக்கில் தொடர்புடைய காரமடையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். 



இதனையடுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் கல்லை கட்டி வீசப்பட்டிருந்த சிவமூர்த்தியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு போலீசார், கைது செய்யப்பட்ட நால்வரையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி கவியரசு உத்தரவிட்டார். அதன்படி நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...