கோவை: 'கஷ்டப்பட்டு கண்முழிச்சி தூங்காம வியர்வை சிந்தி விவசாயம் பன்னுன எங்களுக்கு 5 ரூபாய் தான், ஆனா கைமாத்தி விடுற இடைதரகர்களுக்கு 25 ரூபாய் லாபம் கிடைக்குது' - காய்கறிகளுக்கு MSP (Minimum selling price) என சொல்லக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாளாக உள்ளது. தென்னை, மக்காச்சோளம் விவசாயத்திற்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனிடையே, காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதற்கான உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைவதாகவும், இடைத்தரகள் அவர்களிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி சென்று மக்களிடம் அதிக விலைக்கு விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
கோவை அடுத்த சூலூர் பகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் விவசாயம் செய்து வரும் ரகுபதி கூறுகையில், "தண்ணீர் பிரச்னை, வேலை ஆட்கள் பிரச்னை, விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்னைகளுக்கு மத்தியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில், காய்கறி விவசாயிகள் அதற்கான உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, வெண்டைக்காய் விவசாயத்தில் நாள்தோறும் காய்களை பறிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது முற்றிவிடும். அப்படி இருக்க பறிக்கப்படும் வெண்டைக்காய்களை இடைத்தரர்கள் எங்களிடம் கிலோ ரூ. 5 முதல் ரூ. 15 வரை வாங்கிக்கொண்டு ரூ. 25 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்கிறார்கள். வெண்டைக்காய்களை உற்பத்தி செய்ய விவசாயிக்குக் கிலோ ஒன்றிற்கு 15 முதல் 20 வரை ரூபாய் செலவாகிறது. ஆனால், எங்களுக்கு அசல் விலை கூட கிடைப்பது இல்லை. இதனைத் தடுக்க காய்கறி சந்தைகள் உள்ளிட்டவற்றில் அரசாங்கம் ஒழுங்குமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இடைத்தரர்களை ஒழிக்க வேண்டும்," என்றார்.
சிறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை உழவர் சந்தைகளுக்கு சென்று விற்பனை செய்யலாம். ஆனால், அவர்கள் வேலைப்பளு காரணமாக பல விவசாயிகள் செல்லமுடிவது இல்லை. இதனைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் அவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி பல மடங்கு இலாபத்துடன் சந்தைகளில் விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், அதிக விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கும் சூழல் நிலவி வருகிறது. இது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
உழவர் சந்தை என்பது அந்தந்த மாவட்ட விவசாயிகள் தங்கள் காய்கறிகளை, சொந்த மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில், அவர்களே நிர்ணயிக்கும் விலைக்கு விற்பது என்பதாகும். ஆனால், வியாபாரிகள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் வெளியூரிலிருந்து குறைந்த விலைக்கு காய்கறிகளைக் கொண்டு வந்து அதிக விலைக்கு மக்களுக்கு விற்கும் அவல நிலை, தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான உழவர் சந்தைகளில் அதிகரித்துள்ளது. வியாபாரிகளுக்கேன தனி மார்க்கெட் சந்தைகள் இருந்தாலும் கூட, உழவர் சந்தைகளில் அவர்களின் ஆதிக்கம் தொடர்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டியினை முன் வைக்கின்றனர்.
இது குறித்து செயல்தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தலைவர், ஏர்முனை இளைஞர் அணி, என்.எஸ்.பி. வெற்றி கூறுகையில், "இடைத்தரர்களை ஒழிக்க விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை அரசாங்கம் செய்ய வேண்டும். எப்படி அரிசி, கரும்பு போன்றவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதேபோல் காய்கறிகளுக்கும் குறைந்தபட்ச ஆதர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் கிலோ ஒன்றிக்கு குறைந்தபட்ச விலையிலிருந்து தான், வியாபாரிகளுக்கு விவசாயிகள் காய்கறிகளை விற்க முடியும். இதனால், அவர்களுக்கும், பொதுமக்களும் நஷ்டம் ஏற்படாது. அதேபோல, வெளியூர் வியாபாரிகள் உள்ளூர் வியாபாரிகளிடம் சேர்ந்து உழவர் சந்தையில் அதிக விலைக்குக் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். இதனைத் தடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்," என்றார்.
விவசாயம் தான் ஒர் நாட்டின் முதுகு எலும்பு எனச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க விவசாயிகளே அவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.