கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் விஷ வாயு தாக்கி பலி

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த இவர், தனியாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று காலை காந்திபுரம் நூறடி சாலையில் 9-வது வீதியில் மாணிக்கவாசகம் என்ற இந்தியன் வங்கி மேலாளரின் வீட்டில் துப்புரவு பணிக்காக மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் சென்றனர். அப்போது கழிவு நீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தார். 



இதையடுத்து, மகேந்திரனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.மாநகராட்சி பணியாளர்களுக்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ததே உயிரிழப்பிற்கு காரணமெனவும், இப்பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

குறைவான தொகைக்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தப்படுவதாகவும், இதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது தொடர்பான, செய்திகளுக்கு கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யவும்: http://simpli-city.in/theatre-detail.php?id=507

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...