உதகையில் அரசு கல்லூரியை தொடங்க காரணமானவருக்கு நினைவு தினம் அனுசரிப்பு

நீலகிரி: உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்த எச்.பி. ஆரிகவுடரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


நீலகிரி: உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்த எச்.பி. ஆரிகவுடரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தின் முதல் சட்டமேலவை உறுப்பினர், முதல் சட்டமன்ற உறுப்பினர், என்.சி.எம்.எஸ் நிறுவனர், உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமானவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், மது விற்பனை செய்யமுடியாத நிலையை ஏற்படுத்தி பூரண மதுவிலக்கை கொண்டு வந்தவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் எச்.பி ஆரிகவுடர்.

இவரின் நினைவாக சென்னை மேற்கு மேம்பாலம் ரயில் முன்பு உள்ள சாலைக்கு ஆரிகவுடர் சாலை எனவும், கூடலூர், பண்டிப்பூர் எல்லையை பிரிக்கும் சாலையில் அமைந்துள்ள பாலத்திற்கு ஆரிகவுடர் பாலம் என பெயர் சூட்டி தமிழக அரசு கவுரவித்துள்ளது.

இந்நிலையில், இவரது 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள இவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், என்.சி.எம்.எஸ் மேலாண்மை இயக்குனர், எச்.பி.ஆரிகவுடர் அவர்களின் குடும்பத்தாரும், என்.சி.எம்.எஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...