உலக அமைதியை வலியுறுத்தி கோவை-காஷ்மீர் பயணம் மேற்கொள்ளும் சிங்காநல்லூர் இளைஞர்

கோவை: உலக அமைதியை வலியுறுத்தி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவையில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொள்கிறார்.

கோவை: உலக அமைதியை வலியுறுத்தி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவையில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொள்கிறார்.

சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதன் (26). தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இரு சக்கர வாகன பிரியரான இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி பல்வேறு நீண்ட பயணங்கள் மேற்கொள்வது வழக்கம்.



இந்நிலையில், உலக அமைதியை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காஷ்மீர் வரை உலக சமாதானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். இந்த பயணத்தில் காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள கார்துங்லா இந்தியாவின் அபாய பகுதி 400 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக சென்று தேசியக் கொடியை நடவுள்ளார்.

கோவையில் இருந்து பெங்களூரு, ஹதராபாத், நாக்பூர், குவாலியர், ஆக்ரா, டெல்லி, மனாலி, ரோத்தாங் பாஸ், லடாக், கார்துங்லா ஆகிய இடங்களுக்குச் சென்று பின்னர், அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கோவை வருகிறார்.

மொத்தம் 22 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் மதன், இது குறித்து கூறுகையில், "ஒரு நாளைக்கு 500 கி.மீ வரை பயணம் செய்ய உள்ளேன். மேலும், 8000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளேன். முதலில் பைக் ரேஸ் வீரராகவும், ஸ்டண்ட் வீரராகவும் வர ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் அனுமதிக்காததால், திருமணத்தை தொடர்ந்து நீண்ட தூர பயணங்களை குடும்பத்தினர் சம்மதத்தோடு செய்து மேற்கொண்டு வருகிறேன். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் மித்ரன் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...