கோவை: கோவை அடுத்த வீரபாண்டி பிரிவில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று இரவு திடீரென சாலையில் பள்ளமும், விரிசலும் ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே தற்போது விரிசல் மற்றும் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் சாலை தடுப்பான் வைக்கப்பட்டுள்ளது. பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது. இதற்கான பைப் லைன் சாலைக்கு அடியில் செல்கிறது இதன் காரணமாகவே சாலையில் பள்ளம் தோன்றியுள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை - மேட்டுப்பாளையம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு பணிகள் கோவை புதிய பேருந்து நிலையம் முதல் கேஸ் கம்பெனி வரை நிறைவடைந்து விட்டன.

அடுத்து கேஸ் கம்பெனி முதல் மத்தம்பாளையம் வரை பணிகள் மேற்கொள்ளவுள்ளன. இது வீரபாண்டி பிரிவு வழியாக தான் செல்கிறது. நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் போது இது போன்று சாலைகள் விரிசல் அடையாது. தற்போது ஏற்பட்டுள்ள பள்ளம் மற்றும் விரிசல் சரிசெய்யப்படும்." என்றார்.