கோவை: கோவை குற்றாலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூன்றாவது நாளாக இன்றும் விடுமுறை அறிவித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

குற்றாலத்தின் குளிக்கும் இடத்தின் ஆழத்தைக் குறைக்கும் பொருட்டு அங்கு கற்கள் மற்றும் மண் வைக்கப்பட்டு வருகின்றது. அங்கு சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் அதனை சரிசெய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கனமழை காரணமாக கோவை குற்றாலம் பகுதியில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் 12 நாட்கள் கோவை குற்றாலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.