மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

இதற்காக ஆங்காங்கே மலையடிவாரங்களில் உள்ள பாறைகள் பல மீட்டர் ஆழம் வரை வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை மற்றும் சிறுமுகை செல்லும் சாலையோரங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் கல்குழிகள் காணப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலானவற்றில் தற்போது பாறைகள் வெடி வைத்து வெட்டி எடுக்கும் பணி முடிவடைந்த காரணத்தினால் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் ஆழமான கல்குழிகள் போதிய பாதுகாப்பில்லாமல் சுற்றுப்புற தடுப்புகளின்றி காணப்படுகின்றன.
மேலும், தற்போது தொடங்கியுள்ள பருவமழை காரணமாக இக்குழிகளில் தண்ணீர் நிரம்பி குட்டைகள் போல் காட்சியளிக்கின்றன. நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த குழிகள் மிக ஆபத்தானது, இதில் இறங்கி குளிக்கவோ அல்லது மீன் பிடித்து விளையாடவோ முயற்சித்தால் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க இயலாது என தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், பயன்பாட்டில் இல்லாத இது போன்ற கல்குழிகளை சுற்றி தடுப்புகள் ஏற்படுத்துவதோடு, எச்சரிக்கை அறிவிப்புகளையும் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
நீர்த் தேக்கத்தால் வழுக்கும் தன்மையோடு ஆளை விழுங்கக் காத்திருக்கும் இந்த ஆழமான கல்குழிகளை சுற்றி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதே இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.