மதுக்கடை வேண்டும் : பொதுமக்களுடன் மல்லுக்கட்டிய குடிமகன்கள்

திருப்பூர்: பல்லடம் பகுதியில் இன்று புதியதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில் அங்கு சென்ற குடிமகன்கள் கட்டாயம் மதுக்கடை வேண்டும் என்று வாக்குவாதம் நடத்தினர்.

திருப்பூர்: பல்லடம் பகுதியில் இன்று புதியதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில் அங்கு சென்ற குடிமகன்கள் கட்டாயம் மதுக்கடை வேண்டும் என்று வாக்குவாதம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்ன கோடங்கிபாளையம், என்.ஜி.ஆர் காலனி பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு புதியதாக அரசு மதுபான கடை திறக்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டாம் என்று மனு அளித்தனர்.

ஆனால், பொதுமக்களுக்கு தெரியாமல் இன்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புதிய மதுபான கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகளும் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

மது பிரியர்கள்

இந்த களேபரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் சில அங்கு வந்த குடிமகன்கள் மதுபான கடைக்கு நீண்ட தூரம் செல்வதால் அங்கு உள்ள கடையை மூடக்கூடாது என்று கூறினர். முற்றுகை போராட்டம் நடத்தி, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்த பெண்கள் இதனைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட, குடிமகன்களிடம் மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே, சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் குடிமகன்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் கலைந்து போகக் கூறினர்.



மதுபான கடையை நிரந்தரமாக அகற்றாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...