எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்

டெல்லி: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் சத்யநாராயணா-வை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

டெல்லி: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் சத்யநாராயணா-வை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு, நீதிபதியாக விமலா அறிவிக்கப்பட்டார்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தால் காலதாமதமாகும் என்பதாலும், உரிய நீதி கிடைக்காது என்பதாலும்,  சுப்ரீம் கோர்ட்டு இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேரும் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். 

அதேநேரம் தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணா-வை பரிந்துரை செய்தது. 

மேலும், மூன்றாவது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், நீதிபதிகள் மீது இதுபோன்று குற்றச்சாட்டு மனுவை இனி தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த 17 பேருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...