பொலிவிழக்கும் மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையம்

கோவை: முறையான பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாததால் மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பயணிகளுக்கு பயன்படாமல் உள்ளது.


கோவை: முறையான பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாததால் மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பயணிகளுக்கு பயன்படாமல் உள்ளது.

மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து துடியலூர், மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஐ.எஸ்.ஐ தரச் சான்றிதழ் பெற்ற இந்த பேருந்து நிலையத்தில் வண்ண மீன் தொட்டிகள், நவீன இயந்திரக் கடிகாரம், இடை தூக்கி, சூரிய ஒளி மற்றும் காற்று மூலமாக மின் உற்பத்தி செய்யும் திட்டம் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் திறந்து வைத்த சில மாதங்களிலேயே பழுதாகி, யாருக்கும் உபயோகமில்லாமல் தற்போது தூசி படிந்து கிடக்கின்றன.

இந்நிலையில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளின் தரமும் குறைந்து கொண்டே வருகிறது.

ஆக்கிரமிப்பு

பயணிகளுக்காகவே பேருந்து நிலையத்திற்குள் தனியார் உணவகங்களும், பேக்கரிகளும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கிவருகிறது. இந்த கடைகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பிட்ட இடத்தை தாண்டியும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்து வருவதால் இந்த கடைகள் பயணிகளுக்கு இடையூறாக மாறியுள்ளன. மேலும், இந்த கடைகளில் இருந்து கழிவு நீரும், குப்பைகளும் முறையாக வெளியேற்றப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தனியார் வாகனங்களை பேருந்து நிலையத்திற்குள் நிறுத்த அனுமதி இல்லாதபோதும், இந்த கடைக்காரர்களின் தயவோடு ஏராளமான இரு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் ஒரு புறம் ஆக்கிரமித்து வருகின்றன.



மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை

இந்த பேருந்து நிலையத்தில் கட்டண அடிப்படையில் இரண்டு பொது கழிப்பறைகளும், மாற்றுத் திறனாளிக்கான ஒரு கழிப்பறை என மொத்தம் மூன்று கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை இதுவரை பயன்பாட்டுக்கே வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.



கழிவு நீர் தேக்கம்

புதிய பேருந்து நிலைய வளாகம் பிரதான சாலையிலிருந்து தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால் மழை பெய்யும் நாட்களில் மழை நீர் சாக்கடை நீரோடு கலந்து பயணிகளுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது. மேலும், சாதாரண நாட்களிலும் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி பேருந்துக்காக காதிருக்கும் பயணிகளை மூக்கைப் பிடிக்க வைக்கிறது.



இவை மட்டுமின்றி பேருந்திலிருந்து பயணிகள் இறங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடைகள் அனைத்தும் சேதமாகி, டைல்ஸ்கள் சிதைந்து காணப்படுகிறது. இதனால் முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும் சிரமப்பட்டு வருவதாக பயணிகள் புகாரளிக்கின்றனர்.



இவ்வாறு சிதைந்து வரும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, ஐ.எஸ்.ஐ தரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும், இது தொடர்பான செய்தியை படிக்க கீழே லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://simpli-city.in/news-details.php?nid=18197&isnotify=n

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...