கோவை: ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தவர் மீது இரண்டு மாவட்ட காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களே மோசடி செய்தவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், கோவையில் ஒயிட் காலர் அசோசியேசன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கோவையில் கடந்த மூன்று வருடங்களாக இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. 600-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக இந்த நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
பல்வேறு திட்டங்களின் பெயரில் சிவக்குமாருடன் , முருகேஷ் , சேகர் , லட்சுமி , விமலா ஆகியோர் இணைந்து பணத்தை சுருட்டியதாக தெரிகிறது. இரட்டிப்பு பணம், பரிசு மழை போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமார்ந்தனர். அந்த பணத்தோடு சிவக்குமார் கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாகிவிட்டார்.
இப்படி தலைமறைவாக இருந்த மோசடி நபர்களை பலகட்ட தேடுதல்களுக்கு பிறகு அவருடைய வீட்டு உபயோகப்பொருட்களை ஏற்றிச் சென்ற வண்டியின் எண் மூலம், ஆர்.டி.ஓ அலுவலக உதவியுடன் அந்த வண்டியின் ஓட்டுநரை தேடிச்சென்றுள்ளனர்.
ஓட்டுநர் தந்த தகவல்களின் அடிப்படையில் திருச்சியில் இருந்த சிவக்குமாரை பாதிக்கப்பட்டவர்களே பிடித்துள்ளனர். ஆனால், பிடிபட்ட நிலையில் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக கூறியதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் அவரை விட்டுவிட்டனர்.
ஆனால், சிவக்குமார் அன்று இரவே வீட்டை காலி செய்து அடுத்து ஊருக்கு சென்றுள்ளார். இப்படியே 4 ஊர்களுக்கு சென்ற சிவக்குமாரை பாதிக்கப்பட்ட பொது மக்கள் பிடித்து கோவை மாநகர காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 2 மாவட்ட காவல்துறையிடம் புகார் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மோசடி செய்தவரை பாதிக்கப்பட்டவர்களே கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.