திருப்பூர்: பல்லடம் அருகே மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.60,000 கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நொச்சிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில். அதே பகுதியில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று கடையை திறந்த அவர் அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடைப்பதை பார்த்தார். மேலும், கடையில் இருந்த ரூ. 60,000 பணம் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரித்ததில் கடையின் மேற்கூரையைப் பிரித்து மர்ம நபர் கடைக்குள் உள்ளே இறங்கியது தெரிய வந்தது.
தொடர்ந்து, கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கடையின் உள்ளே இறங்கி திருடி சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.