திருவள்ளூர்: ஆசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிரதி பலனாக அவரது பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.

திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான். ஆசிரியரைத் தாண்டி மாணவர்களுடன் நண்பரைப்போல் பழகியதால் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இவர்மீது அதீத பிரியம்.
இந்நிலையில், அவருக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. அதற்கான ஆர்டரை பெற அவர் பள்ளிக்கு சென்ற போது மாணவர்கள், "பள்ளியை விட்டுப் போகாதீர்கள் சார்.." என்று அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பிரபலமானது. மாணவர்கள் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் பகவானை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை, ஆசிரியர் பகவானை வெளியகரம் பள்ளியிலே தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியரின் பணியிடை மாற்றம் ரத்து செய்யப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.