மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலருக்கு தர்ம அடி

வேலூர்: வேலூர் அருகே மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலரை மணல் கொள்ளையர்களே அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: வேலூர் அருகே மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலரை மணல் கொள்ளையர்களே அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் (50). இவர் அதே பகுதியில் மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வசூல் வேட்டை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் அவர்களது மாட்டு வண்டியை மட்டும் பறிமுதல் செய்துள்ளார். பணத்தையும் பெற்றுக்கொண்டு மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த அந்த மணல் கொள்ளையர்கள் இருவரும் ராஜேந்திரனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் மீது மணல் கொள்ளையர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...