நீங்கள் சுத்தம் செய்துட்டே வாங்க..! நாங்க அசுத்தம் செய்துட்டே வர்ரோம்...! : வாலாங்குளம் மருத்துவக் கழிவுகளால் மாசு

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளை தூய்மைச் செய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், வாலாங்குளத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தன்னார்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளை தூய்மைச் செய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், வாலாங்குளத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தன்னார்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 



கோவை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து அனைத்து நீர்நிலைகளிலும் தூர்வாருதல், சீரமைப்புப் பணிகள் போன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளங்கள், ஏரிகள் போன்ற நீர்த்தேக்கங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்புத் தருமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உக்கடம் வாலாங்குளத்தில் தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளத்தில் மருத்துவ கழிவுகளும், தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகளின் கவர்களும் கிடந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் நீரில் கலந்து விடுகின்றன. இந்தக் குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை கோவை நகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சாப்பிட்டு நோய் தொற்று ஏற்படுமே என்ற எண்ணத்தில் தன்னார்வலர்கள் மிகவும் வருந்தினர். இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுகளைக் கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.



இலாப நோக்கமற்று கோவையில் உள்ள நீர்நிலைகளை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் இந்தத் தூய்மைப் பணியில் பங்கெடுக்காவிட்டாலும், இதுபோன்ற சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது அனைவரின் கருத்தாகும். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...