கோவை: தமிழகத்தில் நடைபெற்று வரும் சமீபத்திய கைது நடவடிக்கைகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளாகவே இருப்பதாகவும், நீதிமன்றங்கள் இந்தக் கைதுகளை ஏற்பதில்லை என கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் தொலைகாட்சியின் சார்பில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் அதன் செய்தியாளர் மீது வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு போடப்பட்டது. இதில், அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜாராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, இன்று பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்நிலையத்தில் அமீர் விளக்கம் அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் நடைபெற்று வரும் சமீபத்திய கைது நடவடிக்கைகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளாகும். நீதிமன்றங்கள் இந்தக் கைதுகளை ஏற்பதில்லை, இவ்வாறு அவர் கூறினார்.