கோவை: சிங்காநல்லூர் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகரில் திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் சாலையை கடப்பதில் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துக்களும் அதிகமாக ஏற்படுவதை தவிர்க்க அரசு அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும், காந்திபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தில் நூறடி சாலையில் உள்ள மேம்பாலத்தை பார்ப்பதற்கும், பயணிப்பதற்கும் பயணிகள் அச்சப்படுவதால் பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்த பிறகு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும், ஆவாரம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
எனவே பாலம் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.