கோவை: கரூர் - கோவை இடையே அமைக்க இருக்கும் தேசிய புற வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கரூர் - கோவை இடையே தேசிய கிழக்கு புறவழிச்சாலை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினால், ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம், கோவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மனு அளித்த பிறகு அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி பேசுகையில், "இத்திட்டத்தினால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இதுவரை விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் கூட நடத்தவில்லை. அதிவிரைவு வாகனப் போக்குவரத்திற்காக, இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது விவசாய நிலங்களைப் பாதிக்காத வண்ணம் செயல்படுத்த வேண்டும்," இவ்வாறு கூறினார்.