தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற வேண்டும் - வேளாண் நிபுணர்

கோவை: தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதன் மூலமாக அதனை விவசாய நிலங்களை மாற்ற வேண்டும் என்று கோவை வன வேளாண்மை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் நிபுணர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதன் மூலமாக அதனை விவசாய நிலங்களை மாற்ற வேண்டும் என்று கோவை வன வேளாண்மை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் நிபுணர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் நேற்று சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளியில் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாராயணசாமி பேசியதாவது:-

கோவையில் 99 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் செய்யாமல் தரிசு நிலங்களாக உள்ளன. 2.65 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதிலும், தொடர்ந்து விவசாயம் செய்யப்படுவது இல்லை. வருடத்திற்கு ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.

விவசாயம் செய்யாத நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடும். அத்தகைய நிலங்கள் மழை நீரைக் கூட சேமிக்க இயலாத நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்களுக்கு ஒரு நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் அந்த நிலத்தை தரிசு நிலம் என்று அரசு அறிவிக்கும்.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலங்களை சுலபமாக தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவிட முடியும். ஆகவே, தரிசாக உள்ள நிலங்களில் விவசாயம் செய்யும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...