கோவை: கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கோவை: கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கனமழை காரணமாக கோவையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது.
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 9-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கோவை குற்றாலத்தில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்ததிருந்தனர்.
இந்த சூழலில், மழை குறைந்ததைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி மீண்டும் கோவை குற்றாலத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழப்பு
நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், அங்கு பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
இந்த சூழலில், அருவியில் குளித்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
உடனே, வனத்துறையினர் அவரை பொதுமக்கள் உதவியுடன் வெளியே அழைத்து வந்தனர்.
ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உயிரிழந்தவரின் விபரம், அவருடன் வந்ததாக சொல்லப்படும் நபர், சிசிடிவி காட்சிகள், குற்றால அருவி நுழைவாயில் கட்டண பதிவு புத்தகம் ஆகியவை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருவியில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததால் வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.