நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு மாடுகளால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு மாடுகளால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து யானை, காட்டு மாடு போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து அவ்வப்போது விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருவது வழக்கம். அங்கு ஏற்பாடும் வன விலங்குகள்-மனித மோதல்களால் மனித உயிரிழப்புகளும் ஏறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் உள்ள சோதனை சாவடி அருகே காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

எனவே, அப்பகுதியில் உலா வரும் காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.