திருப்பூர்: வழக்கு விசாரணையின் போது நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் உரிய காலத்தில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு கிடைக்கும் என்று பல்லடத்தில் நடைபெற்ற சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜீ பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சார்பு நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சார்பு நீதிமன்ற நீதிபதியாக மீனா சந்திரா பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது நீதிபதி இந்திராபானர்ஜீ பேசுகையில், "ஒரு வழக்கு நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வரும் பொழுது அந்த நீதிமன்றத்தின் நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் போது தான் அந்த வழக்கிற்கு தகுந்த நீதி உரிய நேரத்தில் கிடைக்கும்.
இவ்வாறான சார்பு நீதிமன்றங்கள் திறப்பதால் மக்களுக்கு உரிய நீதி, உரிய நேரத்தில் கிடைக்கும்." என்றார்.