கோவையில் குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை: அமைச்சர் வேலுமணி விளக்கம்

கோவை: கோவையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.

கோவை: கோவையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கலையரங்கத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்கள் திருமணத்திற்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பயனாளிகளுக்கு திட்டங்களை வழங்கினார்.

பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த பெண்கள் 1,446 பேருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு முடித்த 633 மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 2216 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கமும் என மொத்தம் 13.94 கோடி ரூபாய்க்கான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- 

24 மணி நேரம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த 2008-ல் தி.மு.க., ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது அ.தி.மு.க., அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சூயஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்த போடப்பட்டுள்ளது. 

தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை முழுமையாக அவர்களிடம் கொடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் தான் முழு கட்டுப்பாடும் உள்ளது. இது ஒரு அருமையான மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம். எந்த ஒரு நல்ல திட்டம் வந்தாலும் விமர்சிக்கப்படுகின்றது.

தண்ணீர்

கோவை மக்களுக்கு போதுமான தண்ணீர் நமது மாவட்டத்தில் உள்ளது. ஆனால், அதனை வினியோகம் செய்வதில்தான் சிக்கல் இருக்கின்றது. தண்ணீர் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை. மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போகின்றோம்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...