கோவை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்லில் நேற்று ஆளுநரின் காருக்கு கறுப்புக் கொடி காட்டியதாக தி.மு.க.,வைச் 192 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் இந்தக் கைது சம்பவத்தைக் செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, ரங்கநாதன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல, சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என். ராஜன் தலைமையில், சின்னியம்பாளையம் அருகே தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். வால்பாறையிலும் தி.மு.க.,வினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருப்பூரில் தி.மு.க., சார்பில் குமரன் சாலையில் சாலை மறியல் நடத்தப்பட்டது. பிரதான சாலையான குமரன் சாலையில் நடைபெற்ற மறியல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை போலீசார் கைது செய்து, பின்னர் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். தி.மு.க.,வினரின் இந்த திடீர் சாலை மறியிலால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகை காபிஹவுஸ் சதுக்கப் பகுதியில் தி.மு.க.,வினர், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.