கோவை : வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் என எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பொதுமக்களிடையே வேளாண் தொழில் மீதான நாட்டத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக சிந்தனைகள் மற்றும் சிறந்த விவசாயிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை செய்தல் போன்றவற்றிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உரையாற்றினார்.

அவர் பேசியதாவது :- பயிர் விதைப்பது முதல் அறுவடை வரையில் உள்ள பொருளாதார நிலைக் குறித்து தெரிந்து கொண்டால், நல்ல இலாபம் பெறுவதோடு, ஏமாற்றப்படுவதில் இருந்து விவசாயிகள் விடுபடலாம். மேலும், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் நடவடிக்கையைச் செய்து கொடுத்தால், நஷ்டத்தை, இலாபகரமானதாக விவசாயிகள் மாற்ற முடியும், என்றார்.

இந்த நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பயனடைந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் புத்தகங்கள், வேளாண் பொருட்கள், இயந்திரங்கள், விதைகள் போன்ற விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.