கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால் அணைகள் மற்றும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 11 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 21 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் அருவிக்கு வரும் நீரின் அளவு 966.21 கனஅடியாகும். அருவியில் இருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.
நீரார் அணையில் மழையின் அளவு 12 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 127.45 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 136.92 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணையில், 28 மி.மீ., மழை பெய்துள்ளது. விநாடிக்கு 2,120.83 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 995.14 கனஅடி விடுவிக்கப்பட்டு பைபாஸ் வழியாக பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது.