கோவை: சிறுவாணி அருகே நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால், மரக்கிளை விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள சில மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, விரிவாக்கப் பணிகளுக்கு ஏதுவாக, கள்ளிப்பாளையம், கருப்பராயன் கோவில் அருகே உள்ள புளிய மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாமல், அலட்சியமாக இந்தப் பணிகளை செய்து வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் வங்கிக்குச் சென்று வந்த போளுவாம்பட்டியை சேர்ந்த இரு பெண்கள் சிறுவாணி சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் மீது திடீரென மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில், ஒரு பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அவர்களின் இருசக்கர வாகனமும் சேதமடைந்தது. போக்குவரத்து இல்லாத சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பணியாளர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த சம்பவம் மேலும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த விபத்திற்குக் காரணமான சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ செலவையும், வாகன பழுதுபார்ப்பையும் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.