உதகையில் விரைவில் உபயமாகிறது சூழலை கெடுக்காத பசுமை பூங்கா..!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

நீலகிரி: நீலகிரியில் ரூ. 10 கோடி செலவில் புதிதாக 'சூழல் பசுமை பூங்கா' அமைக்கப்படுவதன் மூலம், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.


நீலகிரி: நீலகிரியில் ரூ. 10 கோடி செலவில் புதிதாக 'சூழல் பசுமை பூங்கா' அமைக்கப்படுவதன் மூலம், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.



நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின் படி, ஆண்டுக்கு 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து சென்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, தேயிலை பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர் வீழ்ச்சி மற்றும் படகு இல்லம், மரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி கோடநாடு காட்சிமுனை ஆகிய சுற்றுலா மையங்கள் உள்ளன.

பழைய சுற்றுலாத் தலங்களால் அலுப்பு:

கடந்த சில ஆண்டுகளாக, மாநில அரசு சார்பில் நீலகிரி மாவட்டத்தில் புதியதாக சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் அமைக்கப்படவில்லை. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏற்கனவே பார்த்த சுற்றுலா தலங்களை மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 'மாவட்டத்தின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில், மேலும், பல சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். அதேவேளையில், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு சென்றது.



முதலமைச்சர் அறிவிப்பு:

இந்நிலையில், மாநில அரசின் மானிய கோரிக்கையின் போது, 'உதகையில், ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக சூழல் பசுமை பூங்கா அமைக்கப்படும்' என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது, இந்தப் பூங்கா அமைக்க, ஒன்பதாவது மைல், சூட்டிங் மட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வருவாய் துறைக்கு சொந்தமான, எட்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது புல் வெளியாகக் காட்சியளிக்கிறது. இதன் அழகு மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, 'சூழல் பசுமை பூங்கா' விரைவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கூடுதல் வருவாய்:







இந்தப் பூங்கா அமைக்கப்பட்டால், கேரள, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், உதகைக்கு வரும் வழியில், இதனைக் கண்டு ரசித்துவிட்டு நகருக்குள் வர முடியும். இதன்மூலம் கோடை சீசன், தொடர் விடுமுறை காலங்களில் உதகைக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், நெரிசல் இல்லாமல், ஒரு புதிய சுற்றுலா தலத்தை கண்டு ரசித்து செல்ல முடியும். இதனால், நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இடத்தை வருவாய் துறையிடம் இருந்து தோட்டக்கலைத் துறை பெறவேண்டும். பின், பூங்கா பணிக்கு உடனடி நிதி பெற்றால்தான், அடுத்த கோடை சீசனுக்குள் பூங்காவை தயார் செய்ய முடியும். 

அறிவிப்பு மட்டுமே:







இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், "முதலமைச்சர் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளார். இதற்கான ஆணை பிறப்பித்த பின்னரே இத்திட்டத்தின் முழு விபரம் தெரிய வரும். எனினும், புதிய பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருப்பது சுற்றுலாப் பயணிகள், மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு ஆணை பிறப்பித்தவுடன் இதற்கான பணி விரைவுபடுத்தப்படும்" என்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...