மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சாதனை முயற்சியாக தொடர்ந்து 36 மணிநேரம் இடைவிடாமல் நடைபெறும் மராத்தான் இசைக்கச்சேரி இன்று தொடங்கியது.

பாரம்பரிய இசைக்கலைகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஒரு சாதனை முயற்சியாக தொடர்ந்து 36 மணிநேரம் இடைவிடாமல் நடத்தப்படும் இசைக்கச்சேரி இன்று தொடங்கியது. ஸ்ரீசாய் கலாசேத்ரா சார்பில் மிக அதிக நேரம் தொடர்ந்து நடத்தப்படும் இந்த மராத்தான் இசை நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 43 பேர் ஒருங்கிணைந்து, வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், வீணையிசை, கிடார் மற்றும் கீபோர்ட் என இசைக்கருவிகளை வாசித்தும் பாடியும் வருகின்றனர்.
இந்த சாதனை முயற்சிக்கு கடந்த பத்து மாதங்களாகத் தீவிர பயிற்சியெடுத்து களம் இறங்கியுள்ள இக்கலை குழுவினர், இன்று சனிக்கிழமை காலை ஏழு மணிக்குத் துவங்கி நாளை ஞாயிறன்று இரவு ஒன்பது மணிக்கு நிறைவடைய உள்ளது. முறைப்படி சங்கீதம் கற்ற இளம் மாணவிகள், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளை இடைவிடாமல் வாசிப்பதையும், பாடுவதையும் பலரும் கண்டு ரசித்து வருகின்றனர். நமது பண்பாடு மற்றும் பாரம்பரிய இசையைப் பலரது கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.